தினம் ஒரு மாணவர்

இந்திப் பதிவின் கதாநாயகன் இவர்தான். இவரது பெயர் N.திருநந்தகுமார். இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்.
ஓவிய ஆசிரியர் முத்துக்குமரன் அவர்களின் மாணவர்.

இவர் சிறந்த பிறவி ஓவியர் . இவரது தந்தை ஒரு ஸ்தபதியும் கூட. அதனால் தன் தந்தையின் சிற்பம் வடிக்கும் திறன் இவருள்ளும் ஜீன் வழியே வந்துவிட்டது
போலும். அதனாலேயே இவரது ஆசிரியரின் பயிற்சியில் இவருக்கான களிமண் சிற்பக்கலை விரைந்து கைகூடிவிட்டது. இதன் காரணமாக கலா உத்சவ் - Visual Arts எனும்  காண்கலைப் பிரிவில் களிமண் சிற்பங்கள் செய்தல் போட்டியில் மாநில அளவில் (3D Art)முதலிடமும், தேசிய அளவில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பும் பெற்றவர். போர்ட்ரெய்ட் ஓவியங்களையும் நன்கு வரைபவர்.

தனது ஆசிரியர் முத்துக்குமரன் அவர்களின் தலைமையில் , தன் மற்ற நண்பர்களுடன் கோடியக்கரையில் நடைபெற்ற ஒளிப்படக் கலைப் பயிற்சி முகாமில் பங்கேற்று ஒளிப்படக் கலையின் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றும் வந்துள்ளார்.

கடந்த வருடம் 12 -ஆம் வகுப்பை நிறைவு செய்த இவர் தற்போது ஓவியக் கல்லுரிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இவர் தன் கலைகளில் சிறந்து விளங்க வாழ்த்துங்கள்...

வாழ்த்துவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்:

96773 64579

Popular posts from this blog

சாதனை மாணவர்கள் பிரசன்ன சிவா & ஜீவா

சாதனை மாணவர் விக்னேஷ்