வாரம் ஒரு ஆசிரியர் தினம் ஒரு மாணவர் ஆசிரியர் முத்துக் குமரன் மாணவர் குண சீலன்
இன்றைய பதிவின் நாயகன் , சாதனை மாணவர் பெயர் K. குணசீலன். பண்ருட்டி அரசுப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் முத்துக்குமரன் அவர்களின் ஓவிய மாணவர். போர்ட்ரெய்ட் - குறிப்பாக Pencil Shading-ல் சமர்த்தார். படிக்கும்போதே ஒரு Proffessioal Artist போல மணமக்களை ஓவியமாக வரைந்து பொருள் ஈட்டியும் வருபவர். அவரது பள்ளியின் தலைமையாசிரியரை தத்ரூபமாக வரைந்து அவருக்குப் பரிசளித்து, பாராட்டு பெற்றவர். பள்ளியின் சுவரோவியங்களிலும் பங்களிப்பு செய்தவர். ஒளிப்படக்கலையில் உள்ள ஆர்வத்தினால் கோடியக்கரையில் நடைபெற்ற ஒளிப்படக்கலைப் பயிற்சி முகாமில் தன் ஆசிரியருடனும், தன் நண்பர்கள் ஹரிநாத், ரூபன் நாத் மற்றும் திருநந்தகுமாருடனும் பங்கேற்று பல்வேறு நுணுக்கங்களைக் கற்று திரும்பியிருக்கிறார்.
தற்போது 12-ஆம் வகுப்பு முடித்து ஓவியக் கல்லூரிக்கு விண்ணப்பித்து , புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்தின் நுழைவுத்தேர்வில் மெரிட்-டில் தேர்வாகியுள்ளார். சென்னை ஓவியக் கல்லூரியின் நுழைவுத்தேர்வுக்காகக் காத்திருக்கிறார்.
இவரைப் பாராட்டிப் பேச :