இதுவரை ஓவியக்கலையுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களைப் பார்த்து மகிழ்ந்த நாம் இனி இசைத்துறையில் திறன் பெற்ற மாணவர் ஒருவரையும் , யோகாசனத்துறையில் திறன் பெற்ற மாணவர் ஒருவரையும் சந்திப்போமா? முதலில் இசைத்துறை மாணவர் பிரசன்ன சிவாவைப் பார்ப்போம். இவர்தான் பிரசன்ன சிவா. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். முன்பே தனக்கு கேள்வி ஞானத்தில் ஒரளவு பாடத் தெரியும் என்றாலும், தனது ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனை சந்தித்ததும்தான் இவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது என்று சொல்கிறார் இவர். தன் இசைத்திறன் தெரிந்ததும் பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழா கொண்டாடும் சமயத்தில் அவரது பாடலான துன்பம் இல்லாத நிலையே சக்தி என்ற பாடலை அறிமுகப்படுத்தி, அதனைப் பாடுவதற்கு பயிற்சியும் அளித்து பள்ளியின் விழாவிலும், தமெரிக்கா டிவி மற்றும் புதுவை கவிதை வானில் கவிமன்றம் நடத்திய சாதனை நிகழ்விலும் பாட வைத்தாராம் ஓவிய ஆசிரியர் முத்துக்குமரன். இத்தனைக்கும் அவருக்கும் கர்நாடக இசையில் முறையான பயிற்சி எதுவும் கிடையாது. எல்லாம் கேள்வி ஞானம்தான். அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால்