சாதனை மாணவர் விக்னேஷ்



இன்றைய நாளின் சாதனை மாணவர் இவர்தான் .இவர் பெயர் P. விக்னேஷ். தற்பொழுது பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12. ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

போர்ட்ரெய்ட், கலர் பென்சில் , பென்சில் ஷேடிங் என வெளுத்துக் கட்டுவார். தன் பள்ளியின் சுவரோவியங்களில் இவரது பங்களிப்பு அதிகம்  உண்டு.

கடந்த வாரம் கூட புதுவையில் வெங்கட்டா நகர் பூங்காவில் சுவரோவியங்கள் வரைந்த குழுவில் இடம் பெற்றமைக்காக புதுச்சேரி சபாநாயகர் கைகளால் பாராட்டும், பரிசும் பெற்றவர்.

மேலும் ஆறாம் வகுப்பில் இருந்தே இப்பள்ளியில் இவர் படித்து வருவதால், தொடர்ந்து  ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனின் வழிகாட்டலில் இவர் தன் திறனில் சிறந்து விளங்கி வருவதோடு தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் கண்காட்சிகளில் இவரது பங்கேற்பு இருந்து கொண்டே இருக்கும்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மூன்று நாள் ஓவியத் திருவிழாவிற்கு,
தன் ஆசிரியர் முத்துக்குமரன் மற்றும் சக மாணவர்கள் ஐவருடன் சென்று அங்கு நடைபெற்ற பல்வேறு ஓவிய நுட்பப் பயிலரங்குகளில், ஓவிய நிகழ்வுகளில் ,  கலந்துகொண்டு தன்னை இந்த மெருகேற்றி வந்திருக்கிறார்.

மேலும் இவர் ஒரு சாரணரும் கூட. தான் சார்ந்த சாரணர் படையின் தலைவராக இருந்து தன் சாரண ஆசிரியர் முத்துக்குமரனுக்கு துணையாக இருந்து சாரணப் படையை வழி நடத்தியுள்ளார்.
இவர் சாரணியத்தின் மிக உயர்ந்த மாநில விருதான ராஜ்ய புரஸ்கார் என்னும் விருதுக்கும் தேர்வாகியிருக்கிறார்.

இன்னம் ஒரு செய்தி இங்கு குறிப்பிட வேண்டும். 2019-ல் சென்னையில் நடைபெற்ற சாரணப் பெருந்திரளணியில் தன் சாரண ஆசிரியர் தலைமையில் கடலூர் மாவட்ட அணியில் இடம் பெற்று, அங்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று , அவற்றுள் இரண்டு போட்டிகளில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றதற்கு முக்கிய காரணமாக இவரும்.இருந்துள்ளார்.

இத்தனை சிறப்புகள் பெற்றிருக்கும் மாணவர் விக்னேஷை வாழ்த்தி மகிழ்கிறோம்.

இவரை நீங்களும் அழைத்து வாழ்த்தினால் அவருடைய வளர்ச்சிக்கு அது இன்னும் உந்து சக்தியாக இருக்கும் அல்லவா..?

இதோ அவரது தொடர்பு எண் :

6382371573


ஆசிரியர்குரல் அருணாசலம்

Popular posts from this blog

தினம் ஒரு மாணவர் தொடர்..ஆசிரியர் குரல் அருணாசலம்

சாதனை மாணவர்கள் பிரசன்ன சிவா & ஜீவா