சாதனை மாணவர்கள் கோகுலன் & கோகுல்நாத்

இன்று நாம் பண்ருட்டி அரசுப் பள்ளியின் ஓவிய மாணவர்கள் இருவரைப் பற்றிப் பார்ப்போம். ஆனால் இந்தப் பதிவுகளின் துவக்கத்தில் வாரம் ஒரு ஆசிரியர், நாளும் ஒரு மாணவர் என்று குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா ? ஆனால் இந்தப் பதிவில் அதற்கு மாறாக இருவர் இடம் பெற்றிருக்கிறார்களே என்று பார்க்கிறீர்களா? பண்ருட்டி அரசுப் பள்ளியில் சாதனை மாணவர்களின் எண்ணிக்கைக்குப் பஞ்சம் இல்லை. அவர்களுள் கூடுதலாக இருவரையேனும் அறிமுகம் செய்யலாமே என்ற எண்ணம்தான். இனி சாதனை மாணவர்கள் இருவரையும் சந்திப்போமா..?
ஒருவர் கோகுலன். மற்றொருவர்  கோகுல்நாத்   இருவருமே 12 -ஆம் வகுப்பு படிப்பவர்கள். இருவருமே சிறப்பாக ஓவியம் வரைபவர்கள்...இருவருமே போர்ட்ரெய்ட் சிறப்பாக வரைபவர்கள்.

சரி முதலில் கோகுலனின் சிறப்பு பற்றிப் பார்ப்போம்.

  
    இதோ...  இவர்தான் கோகுலன். 
சமீபத்தில் தமிழக அரசு நடத்திய திருக்குறள் ஓவியப்போட்டியில். கலந்துகொண்டு ஊக்கப் பரிசாக ரூ1000 வென்றவர். இவரது அந்த பரிசு பெற்ற ஓவியம் தமிழக அரசு தொகுத்து வெளியிட்ட திருக்குறள் காலண்டரில் இவரது பெயருடனும் பள்ளியின் பெ யருடனும் அச்சிடப்பட்டுள்ளது  அந்த ஊக்கப் பரிசுக்கான காசோலையையும், பாராட்டுச்  சான்றிதழையும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களது கரங்களால் பெற்றார். அதன்மூலம் தனது பள்ளியை கடலூர் மாவட்ட அளவிலும், தமிழகத்தில் அளவிலும் பெருமைப் படுத்தியுள்ளார். இவரது இந்தச் சாதனையைப் பாராட்டி ஓவிய ஆசிரியர் முத்துக்குமரன் அவர்கள் ஓவிய மன்றப் பரிசாக அவருக்கு சிறப்புக் கேடயத்தையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கியுள்ளார் .


இப்படிப்பட்ட சிறப்புகள் உடைய கோகுலனை வாழ்த்திப் பேச
வேண்டுமா? இதோ அவரது தொடர்பு எண்: 9751883814


 




அடுத்து நாம் சந்திக்க இருப்பது கோகுல்நாத் என்னும் மாணவரை.



இதோ இவர்தான் பண்ருட்டி அரசுே மேல்நிலைப்பள்ளியின்  ஓவிய மாணவர்
செல்வன் கோகுல்நாத் .மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர் .
E.M.A.வகுப்பைச் சேர்ந்தவர். NSS மாணவரும் கூட. ஓவியத்தில் நல்ல ஆர்வமுடையவர். பென்சில் ஓவியம் ஆகட்டும், பேனா ஓவியம் ஆகட்டும்..ஒரு கலக்கு கலக்குவார் . பெயின்ட்டிங்கில் பயிற்சி எடுத்துவருகிறார். சுவரோவியங்கள் வரைவதிலும் உதவி செய்து வருபவர். இவரும் கூட புதுச்சேரியில் நடைபெற்ற சுவரோவிய முகாமில் பங்கேற்று வெங்கட்டா நகர் பூங்காவில் சுவரோவியங்கள் வரைந்தவர். அதற்காக பாராட்டுச் சான்றிதழும், பரிசும் பெற்றவர்.

ஓவியம் சார்ந்த இன்னும் ஒரு கூடுதல் கலையில் இவர் வளர்ந்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு. அது காய்கறிச் சிற்பங்கள் செய்தல்.காய்கள், கனிகளைச் செதுக்கி சிற்பங்கள் அமைத்துவருகிறார். இதனை இவர் இவரது தந்தையிடம் இருந்து கற்று வருகிறார்.

திருமண நிகழ்வு போன்ற சுப நிகழ்வுகளில் இவரது காய்கனிச் சிற்பப் படைப்புகள் இடம் பெற்று வருகின்றன.

மேலும் தன் பள்ளியிலும் இருமுறை தன் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளார். செஸ் ஒலிம்ப்பியாட் விழிப்புணர்வு நிகழ்வுக்காக தான் சார்ந்த NSS அமைப்பு மூலம் ஒரு முறையும், 75.ஆவது விடுதலை நாள் விழாவில் தான் சார்ந்த ராஜா ரவிவர்மா ஓவிய நுண்கலை மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் ஒருமுறையும் தன் காய் கனிச் செதுக்கல் சிற்பங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

இப்படிப்பட்ட சிறப்புகள் உடைய இவரை வாழ்த்திப் பேச வேண்டுமா?

இதோ அவரது தொடர்பு எண் : 

866787598

Popular posts from this blog

தினம் ஒரு மாணவர் தொடர்..ஆசிரியர் குரல் அருணாசலம்

சாதனை மாணவர்கள் பிரசன்ன சிவா & ஜீவா