இன்றைய நாளின் சாதனை மாணவர் இவர்தான் .இவர் பெயர் P. விக்னேஷ். தற்பொழுது பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12. ஆம் வகுப்பு படித்து வருகிறார். போர்ட்ரெய்ட், கலர் பென்சில் , பென்சில் ஷேடிங் என வெளுத்துக் கட்டுவார். தன் பள்ளியின் சுவரோவியங்களில் இவரது பங்களிப்பு அதிகம் உண்டு. கடந்த வாரம் கூட புதுவையில் வெங்கட்டா நகர் பூங்காவில் சுவரோவியங்கள் வரைந்த குழுவில் இடம் பெற்றமைக்காக புதுச்சேரி சபாநாயகர் கைகளால் பாராட்டும், பரிசும் பெற்றவர். மேலும் ஆறாம் வகுப்பில் இருந்தே இப்பள்ளியில் இவர் படித்து வருவதால், தொடர்ந்து ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனின் வழிகாட்டலில் இவர் தன் திறனில் சிறந்து விளங்கி வருவதோடு தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் கண்காட்சிகளில் இவரது பங்கேற்பு இருந்து கொண்டே இருக்கும். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மூன்று நாள் ஓவியத் திருவிழாவிற்கு, தன் ஆசிரியர் முத்துக்குமரன் மற்றும் சக மாணவர்கள் ஐவருடன் சென்று அங்கு நடைபெற்ற பல்வேறு ஓவிய நுட்பப் பயிலரங்குகளில், ஓவிய நிகழ்வுகளில் , கலந்துகொண்டு தன்னை இந்த மெருகேற்றி வந்திருக்கிறார். மேலும் இவர் ஒரு சாரணரும் கூ...